கம்பஹா பொது வைத்தியசாலை வைத்தியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று.

கம்பஹா பொது வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கம்பஹா பொது வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் டாக்டர் பிரியந்த இலெபெரும உறுதி படுத்தியுள்ளார்.
இந்த வைத்தியருக்கு சொந்தமான தனியார் மருந்தகத்தில், வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்ட ஆடைத்தொழிற்சாலை பெண்ணொருவர் சிகிச்சைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள குறித்த வைத்தியர் தற்போது IDH வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.