கீதா மற்றும் 5 மாநில அமைச்சர்கள் பதவி பறிப்பு!

கீதா குமாரசிங்க உள்ளிட்ட 05 இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அரசியலமைப்பின் 47 (3) (அ) சரத்தின் பிரகாரம் இது மேற்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கீதா குமாரசிங்கவுக்கு மேலதிகமாக, ஷசீந்திர ராஜபக்ஷ, அமித் தேனுக விதானகமகே, பிரசன்ன ரணவீர மற்றும் டி.வி. சானக ஆகியோர் , வகித்த பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.