மலேசியா அமைக்கும் போரால் பாதிக்கப்பட்ட இளையருக்கான கல்வி நிலையம்.

போரால் பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த இளையர்கள் கல்வி, பயிற்சி ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்கேற்ற கல்வி நிலையத்தை மலேசியா உருவாக்கும் எனச் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 10) அந்நாட்டுக் கல்வி அமைச்சர் டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் தெரிவித்தார்.

இந்தக் கல்வி நிலையத்தில் பயிற்சிபெறத் தேர்ந்தெடுக்கப்படும் நாடுகளில் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, தீமோர் லெஸ்டே ஆகிய நாடுகளும் அடங்கும் என அவர் கூறினார்.

திரு ஜாம்ப்ரி அப்துல் காதிர் செப்டம்பர் 6ஆம் தேதி முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை அதிகாரத்துவப் பயணமாக சுவிட்சர்லாந்து சென்றார்.

அங்கு, ஆசியான் தலைவர், கிழக்கு ஆசியப் பொருளியல் ஆய்வு நிறுவனத்தின் (ERIA), பேராசிரியர் டெட்சுயா வத்தனாபே, உலக வங்கி குழுமத்தின் முன்னணி வர்த்தக நிபுணர் டாக்டர் ராபர்டோ எச்சாண்டி ஆகியோரைச் சந்தித்தார். அப்போது நடந்த இருதரப்பு சந்திப்பில் இந்தக் கல்வி நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு மலேசியா ஒப்புக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

இது மலேசியாவுக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் என செப்டம்பர் 10ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.