ரணிலின் கிளிநொச்சி தொப்பி கதை! (Video)
நேற்று பிற்பகல் நடைபெற்ற சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரசாரக் கூட்டங்களுக்குச் சென்ற போது அவர் ஒரு தொப்பியை அணிந்திருந்தார். அந்த பழுப்பு நிற தொப்பியுடன் கஹடகஸ்திகிலிய உள்ளிட்ட தனது பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றினார்.
அப்போது அவர் அணிந்திருந்த தொப்பியின் பெறுமதி ஒரு லட்சத்துக்கும் மேலானது என சொன்னார்.
நான் ஏன் இந்த தொப்பியை அணிந்தேன் என்பதுதான் உங்கள் அனைவரின் கேள்வி. கிளிநொச்சி கூட்டத்தில் நான் பேசி முடித்ததும், மேடையில் இருந்து இறங்கும் போது ஒரு வயதான பெண்மணி இதை என்னிடம் கொடுத்தார்.
அவர்களுக்கு உணவு , மருந்து , எரிபொருள் கொடுத்ததற்கு நன்றி என்றார். இதன் மதிப்பு ஒரு லட்சத்திற்கும் மேல் என்பதை ஏற்கிறேன். மரியாதை நிமித்தமாக, அந்தப் பெண் எனக்கு இந்த தொப்பியைக் கொடுத்தார். இது போதாது. நாங்கள் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
அந்தச் செய்தியை வழங்கவே நான் இங்கு வந்தேன். நான் கஹடகஸ் டிலிகிலியில் இருந்து இறங்கும் போது, எங்களிடம் நிறைய உரம் இருக்கிறது , தயவு செய்து வாழ்க்கைச் செலவைக் கொஞ்சம் குறையுங்கள் என கேட்டார்கள்.
அடுத்த வருடம் அதைத்தான் செய்யப் போகிறேன் என்றேன். அதனால் தான் ஓட்டு கேட்க வந்தேன் என்றேன் என்றார்.