கெஹலிய மற்றும் மூவருக்கு பிணை.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
தரமற்ற ஆன்டிபாடி ஊசி சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பெப்ரவரி 02ஆம் திகதி கைதுசெய்யப்பட்டதுடன், சந்தேகநபர் மறுநாள் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அதன்படி கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு 7 மாதங்களின் பின்னர் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.