தமிழரசுக் கட்சி, SJBக்கு ஆதரவளிப்பதாக எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய ஏதுமில்லை… என்கிறார் சுமந்திரன்!
SJBக்கு ஆதரவளிப்பதாக எடுக்கப்பட்ட தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யத் தேவையில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஜனாதிபதி வழக்கறிஞர் எம். சுமந்திரன் தெரிவித்தார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் தனது நிலைப்பாட்டை பின்வருமாறு விளக்கினார்.
கட்சி எடுத்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என மாவை சேனாதிராஜா மற்றும் ஸ்ரீதரன் ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர்.
ஆனால் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளோம். அது சரியான முறைப்படி எமது கட்சி எடுத்த முடிவு. அதை இருவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
எனவே எதிர்கால பணிகள் குறித்து சஜித் பிரேமதாசவுடன் மீண்டும் கலந்துரையாட வேண்டும் என அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
அங்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் ஊடகவியலாளர் ஒருவர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியானால் அவருடன் இணைந்து செயற்பட முடியுமா என வினவினார்.
“ஆம்… நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம். நல்லாட்சி அரசாங்கத்தில் இணைந்து செயற்பட்டோம். ஆட்சிக்கு வந்த பிறகு எதிர்க்கட்சியில் இருந்தாலும், அவர்களுடன் வேலை செய்ய பல விஷயங்கள் உள்ளன. குறிப்பாக ஊழல் மற்றும் ஊழல்களுக்கு எதிராக. ”
“சீனி வரி மோசடி பற்றி ஒரு வழக்கு வருகிறது. அந்த வழக்கு சுனில் ஹந்துன்நெத்தி தொடுத்தது . அந்த வழக்கில் நான் அவருடைய வழக்கறிஞர். ” என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.