ஆட்சி அனுர கைக்கு போகலாம் என்பதால் முதலீட்டாளர்கள் டாலர் பத்திரங்களை விற்று தப்பி ஓடுகிறார்கள்..- Bloomberg
ஜனாதிபதித் தேர்தலை நெருங்கியுள்ள இலங்கையில் நிலவும் அரசியல் நிச்சயமற்ற தன்மை காரணமாக இலங்கையின் டொலர் பத்திரங்களில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் அவற்றை விற்பனை செய்ய ஆர்வத்துடன் இருப்பதாக பிரபல வர்த்தக இணையத்தளமான Bloomberg தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தேர்தலுக்கு முன்னர் கடந்த சில நாட்களாக பத்திரங்களை விற்பனை செய்ய சந்தையில் கடும் போட்டி நிலவி வருகிறது.
இலங்கையின் அரசியல் தலைமை மாற்றம், கடன் மறுசீரமைப்புப் பேச்சுக்களை சீர்குலைக்கக் கூடும் என்றும், முதலீட்டாளர்கள் கலக்கமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர்களுக்கான வேலைத்திட்டத்தின் நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாக கூறப்பட்டதை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுர திஸாநாயக்க சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தமையும் பலதரப்பு கடன் வழங்குனர்களுடன் இணக்கம் காணப்பட்ட கடன் மறுசீரமைப்பு கட்டமைப்பிற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தமையும் இந்த நிலைமைக்கு காரணம் என அந்த இணையத்தளம் குறிப்பாக சுட்டிக்காட்டியுள்ளது.
Bloomberg இணைப்பு:
https://www.bloomberg.com/news/articles/2024-09-09/sri-lanka-debt-tumbles-as-investors-see-rising-political-risk?embedded-checkout=true