வங்கதேசத்தில் 19 மணி நேர மின்வெட்டு.
கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள வங்கதேசத்தின் சில பகுதிகளில் 19 மணி நேர மின்வெட்டு தொடங்கியுள்ளது.
நகர்ப்புறங்களில் 5 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் மற்றும் நிலக்கரி பற்றாக்குறையால் நாட்டில் உள்ள பல அனல் மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
போராட்டக்காரர்களால் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு வங்கதேசம் காபந்து அரசாங்கத்தின் கீழ் செயல்படுகிறது.
புதிய அரசின் கீழ், வங்கதேசம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதால், எரிசக்தி கட்டணத்தை செலுத்தாத காரணத்தால், இந்தியாவின் அதானி நிறுவனம், பங்களாதேஷுக்கு மின்சாரம் வழங்குவதை தடை செய்துள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, பங்களாதேஷ் இடைக்கால அரசு, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து 8 பில்லியன் டாலர் கடன் தொகையை கோரியுள்ளது.