தேசப்பிரேமி மாநாட்டில் இருந்தோர் மீது தாக்குதல் ..தாக்கியோர் திசைகாட்டியினராம் .. (Video)

கொழும்பில் உள்ள பொது நூலகம் மற்றும் ஆவணச் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் நுழைந்த சிலர் ,தேசப்பிரேமி மாநாட்டில் இருந்தோர் மீது தடிகளால் தாக்கியுள்ளனர்.
இந்த மாநாட்டை தேசபக்தி தேசிய முன்னணிகள் ஏற்பாடு செய்திருந்தது.
NPP குழுவினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.
குறித்த மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே குறித்த குழுவினர் வந்து அதற்கெதிராக கருத்துகளை வெளியிட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
அப்போது தடியடி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.