காட்டுப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு!

காட்டுப் பகுதில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது.
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – ராகலை பிரதான வீதியோரத்தில் சமஹில் காட்டுப் பகுதியிலேயே மேற்படி பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.
நேற்று வியாழக்கிழமை மாலை அயலவர்கள் வழங்கிய தகவலையடுத்து அந்தப் பகுதிக்குப் பொலிஸார் சென்று பார்வையிட்டபோது மரம் ஒன்றில் தூக்கிட்டவாறு பெண்ணொருவர் சடலமாகக் காணப்பட்டார்.
தேவாலதென்ன, கலஹகம, ஹக்கல பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளம் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
இது தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.