கொரோனா தொற்று சிகிச்சை நோயாளி தப்பிச் சென்றுள்ளார்.

கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் வைத்தியசாலையில் இருந்து இன்று காலை தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நோயாளி ராகம வைத்தியாசலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தப்பி சென்றுள்ளார்.
இதனையடுத்து தப்பிச்சென்றுள்ள கொரோனா தொற்றாளரை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
தப்பிச்சென்ற நபர் இலக்கம் 307 பேலியகொட வத்தளை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபருக்கு நேற்று இரவு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருந்தது.
அத்துடன் குறித்த நபர் போதைப்பொருள் பாவனையுடையவர் எனத் தெரிவிக்கும் பொலிஸார், போதைப்பொருள் பாவனையின் நிமித்தம் அவர் தப்பிச்சென்றிருக்கலாமென பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில் குறித்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள காவல்துறை, அவர் தொடர்பான தகவல் தெரிந்தால் 0112854880, 0112854885 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கோரியுள்ளனர்.