சர்வதேச நாணய நிதியம் வந்தால் ரணிலுடன் விவாதம் செய்ய தயாரில்லை..- அனுர

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு சவால் விடுக்கும் இன்றைய விவாதத்தில் சர்வதேச நாணய நிதியத்தை இணைப்பதை எதிர்ப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ஜனாதிபதி வேட்பாளர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியினால் நடாத்தப்பட்ட மக்கள் சந்திப்பில் தமது கட்சிகளின் பொருளாதார கொள்கைகள் தொடர்பில் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இந்த விவாதத்தை எந்த தொலைக்காட்சியிலும் நடத்தலாம் என்றும் இரு கட்சிகளின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக எந்த விவாதத்தையும் மேற்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே விவாதத்திற்கு சர்வதேச நாணய நிதியமும் அழைக்கப்படும் என்ற ஜனாதிபதியின் கூற்றை நிராகரித்த அவர், இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஐ.எம்.எப் பங்கேற்பதில்லை என்றார்.

Leave A Reply

Your email address will not be published.