வாகன இறக்குமதிக்கு செய்ய அமைச்சரவை அனுமதி

அனைத்து வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கான தடையை அடுத்த ஆண்டு பெப்ரவரியில் நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்பு மற்றும் ரூபாயின் பலம் போன்றவற்றின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிடுகின்றார்.
பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலம் பொதுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முயற்சியின் ஒரு பகுதியே இது என்றும் அவர் மேலும் கூறினார்.