நாளை புலமைப்பரிசில் எழுதும் குழந்தைகளுக்கான அறிவுரை.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதன்படி, 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்குகிறது.
அன்று காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை இரண்டாவது வினாத்தாள் தேர்வும் , காலை 11.15 முதல் 12.15 மணி வரை முதல் வினாத்தாள் தேர்வு நடைபெறும்.
இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 323,879 பரீட்சார்த்திகளும், சிங்கள மொழிமூலத்தில் 244,092 பரீட்சார்த்திகளும், 79,777 பரீட்சார்த்திகள் தமிழ் மொழி மூலமும் தோற்றுகின்றனர்.
பேனாவால் எழுதினால் கறுப்பு அல்லது நீல பேனாவை மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும் ஏனைய நிறங்களுக்கு அனுமதியில்லை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவித்தல் விடுத்திருந்தார்.
பென்சிலால் எழுதினால் அதற்குத் தடையில்லை என்றும், அதோடு, ரப்பர், ஃபுட் ரூல், தண்ணீர் போத்தல் ஆகியவற்றை தேர்வுக் கூடத்துக்கு எடுத்துச் செல்லலாம், கோப்பு கவர்கள், ஸ்மார்ட் வாட்ச் போன்றவற்றை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
குழந்தைகளை உரிய நேரத்தில் குறித்த பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் சென்று தேவையற்ற அழுத்தங்கள் இன்றி மிகவும் நிதானமான மனதுடன் பரீட்சையை எதிர்கொண்டு வெட்டுப்புள்ளியை கடக்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கேட்டுக் கொண்டார்.
பரீட்சைக்காக நாடளாவிய ரீதியில் 2,849 பரீட்சை நிலையங்களும் விசேட தேவையுடைய குழந்தைகளுக்கான 7 பரீட்சை நிலையங்களும் மஹரகம வைத்தியசாலையில் வசிப்பிட சிகிச்சை பெறும் சிறுவர்களுக்கான பரீட்சை நிலையமும் நிறுவப்பட்டுள்ளது.