வடக்கு, கிழக்கிற்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படாது..- யாழ்ப்பாணத்தில் நாமல்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கீழ் வடக்கு – கிழக்கு இணைக்கப்படாது என்றும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, பௌத்த நாட்டில் அனைத்து மதங்களும், மொழிகளும், மக்களும் பாதுகாக்கப்படுகின்றனர்.
நாடும் கட்சியும் ஒருபோதும் குறுகிய கால சலுகைகள் மற்றும் பதவிகளை வழங்காது என தெரிவித்த அவர், சவால்களுக்கு அஞ்சப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.