திசைகாட்டி கூட்டத்திற்கு சென்ற பஸ் மீது தாக்குதல் !
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் மொனராகலை உள்ளுராட்சி மன்ற மைதானத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மீது இன்று காலை சிலர் தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக புத்தல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கண்டுபிடிக்க மொனராகலை போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர்.