யாழ். நாவாந்துறையில் ரணிலின் பிரசாரம்.
யாழ்ப்பாணம் – நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று சனிக்கிழமை “ரணிலால் இயலும்” என்ற தொனிப்பொருளில் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.