வங்கதேசத்தில் 219 ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன

தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களின் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் அமைதியின்மை காரணமாக, ஆடைத் தொழிற்சாலைகள் உட்பட 219 தொழிற்சாலைகளை மூடுவதற்கு வங்கதேச நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஊதியம், போனஸ் மற்றும் வருகைப் படியை உயர்த்தக் கோரி நிர்வாகத்தை வற்புறுத்தி தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தம் மற்றும் போராட்டம் காரணமாக 86 ஆடைத் தொழிற்சாலைகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.

போராட்டங்களைத் தடுக்கும் வகையில், மற்ற 133 தொழிற்சாலைகளின் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்நாட்டின் ‘நியூஸ் ஏஜ்’ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

ஊழியர்களின் போராட்டங்கள் அதிகரித்த போதிலும், டாக்காவின் ஏற்றுமதி ஊக்குவிப்பு மண்டலத்தில் உள்ள 88 தொழிற்சாலைகளின் உற்பத்தி நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொள்ள முடிந்தது என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வன்முறையைத் தடுக்க தொழிற்சாலைக்கு முன்பாக கூடுதல் போலீஸ் குழுக்கள் குவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.