நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானக் கடைகளும் இரண்டு நாட்களுக்கு மூடல்!

எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதால் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள் மூடப்படும் என கலால் ஆணையர் எம். ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்.