சஜித்தின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது ஹக்கீம் மீது கல் வீச்சு… கூட்ட மைதானத்தில் பரபரப்பு..

SJBயின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் நடைபெற்ற பேரணியின் மீது கற்கள் வீசப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பொதுச் சபையில் உரையாற்றிக் கொண்டிருந்த போது கற்களால் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாக்குதல் சமயத்தில் ஹக்கீமின் மெய்ப்பாதுகாவலர்கள் அவரைச் சுற்றி வளைத்து பாதுகாப்பு வழங்கினர்.
அக்குறணை பிரதேசத்தில் கடந்த 23ஆம் திகதி நடைபெற்ற பேரணியிலும் ஹக்கீமுக்கு எதிராக மக்கள் கோசமிட்டனர்.