நீதிமன்ற உத்தரவால் திலீபன் நினைவேந்தல் விழாவுக்கு தடை!
யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திலீபனின் நினைவேந்தல் விழாவை இவ்வருடம் நடத்துவதைத் தடுக்கும் வகையில் கடந்த 14ஆம் திகதி யாழ் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை கோப்பாய் பிரதேசத்தில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபி வாசலில் நடாத்துவதற்கு பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் திலீபனின் நினைவேந்தல் குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அரசியல் அடிப்படையில் தேர்தல் காலத்தில் இவ்வளவு பெரிய மக்கள் கூடுவதற்கு இடமளிக்க முடியாது என பொலிஸார் யாழ்.நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, நிகழ்வை ஏற்பாடு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வத்துரை கஜேந்திரனுக்கும், யாழ்.மாநகரின் முன்னாள் மேயர் எஸ். மணிவண்ணனுக்கும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து இந்திய அமைதிப்படை வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கிய திலீபன், தான் உண்ணாவிரதம் தொடங்கிய நாளிலிருந்து இறந்த நாளுக்கு இடைப்பட்ட காலத்தை கொண்டாட திட்டமிடப்பட்டிருந்தது.