ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை ஆதரிப்பற்காக பணம் விநியோகித்த தொழிலதிபர் கைது.

மூதூர் பிரதேசத்தில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை ஆதரிப்பற்காக அருகில் வசிப்பவர்களுக்கு 5000 ரூபா வீதம் விநியோகித்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து பெரிய முல்லை பாலத்திற்கு அருகில் உள்ள நபரொருவரின் வீட்டில் வைத்து சந்தேக நபர் பணம் விநியோகிப்பதாக மூதூர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ஜனாதிபதி வேட்பாளரை விளம்பரப்படுத்துவதற்காக அருகாமையில் வசிக்கும் மக்களுக்கு 5000 ரூபா வீதம் விநியோகித்துள்ளதாகவும், அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் நோக்கில் ஜனாதிபதி வேட்பாளருக்கு அதரவாக பணம் வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.