இலங்கை மக்களுக்கு ரணிலின் அருமை புரியாமல் இருக்கின்றது – கிழக்கு ஆளுநர் செந்தில் கவலை.

இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அருமை தெரியாமல் இருக்கின்றது என்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
பேருவளை கடற்கரை விளையாட்டரங்கில் நடைபெற்ற ‘ரணிலால் முடியும்’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“கடந்த இரு வருடங்கள் மிகக் கஷ்டமான காலத்தை இலங்கை கடந்து வந்தது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றிருக்காவிட்டால் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஆயிரக்கணக்கில் உயர்ந்திருக்கும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை மீட்டெடுத்த வேகத்தில் செய்தது போல் உலகில் எவருமே செய்யவில்லை.
மலேசிய பிரதமர், மாலைதீவு முன்னாள் சபாநாயகர், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாட்டின் அரசியல் பிரதிநிகளிடம் பேசும்போதும் ரணில் விக்கிரமசிங்க போன்ற தலைவர்கள் அவர்களின் நாட்டில் இல்லை என்ற ஏக்கம் அவர்களுக்கு இருக்கின்றது. ஆனால், இலங்கை மக்களுக்கே அவரின் அருமை தெரியாமல் இருக்கின்றது.
பலர் பத்திரிகைளில் அறிக்கை விடலாம். மேடைகளில் அழகுவார்த்தைகளைப் பேசலாம். ஆனால், நடைமுறையில் செய்ய முடியாது.” என்றார்.