தேர்தல் வன்முறையாக மாறலாம்.. இலங்கையில் உள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை.

இலங்கைக்கு பயணிக்கும் அமெரிக்க பிரஜைகளுக்கு, அமெரிக்க அரச திணைக்களம் இலங்கையை விட்டு ஒதுங்கி இருக்குமாறு இரண்டாம் நிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால், அதற்கு முன்னரோ, தேர்தலின் போதோ அல்லது அதன் பின்னரோ ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறலாம் எனவும், பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகிக்கலாம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமைதியான கூட்டத்திலிருந்து கூட விலகி இருக்குமாறு அமெரிக்கர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள், ஏனெனில் கூட்டங்களில் வன்முறை சூழ்நிலைகள் சிறிய நிலையிலும் எழலாம்.
சுற்றுலாத் தலங்கள், போக்குவரத்து மையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், அரசாங்க வசதிகள், ஹோட்டல்கள், கிளப்புகள், உணவகங்கள், மதத் தலங்கள், பூங்காக்கள், முக்கிய விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றை இலக்காகக் கொண்டு எந்தவிதமான எச்சரிக்கையும் இல்லாமல் இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன . எனவே அமெரிக்கா விடுத்துள்ள அறிவுறுத்தல்களின்படி செயல்படுமாறு அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு தொடர்புடைய இணைப்பு இங்கே…
https://travel.state.gov/content/travel/en/traveladvisories/traveladvisories/sri-lanka-travel-advisory.html