ரணிலின் கண்டி பிரசாரத்திலும் வெள்ளமெனத் திரண்ட மக்கள்!
கண்டியில் ‘ரணிலால் இயலும்’ என்ற தொனிப்பொருளில் பிராசரக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான அநுராத ஜயரத்ன, திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்தை, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.வேலுகுமார், மஹிந்தானந்த அளுத்கமகே, உதயன கிரிந்திகொட, குணதிலக்க ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரள, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உள்ளிட்டோர் உரையாற்றினர்.