சாஷே பாக்கெட்டின் ராஜ்(ஜா) குமார் காலமானார்

வெல்வெட் ஷாம்பு தயாரிப்பின் மூலமாக உலகேயே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த சி.கே. ராஜ் குமார் காலமானார்.
அவருக்கு வயது 68.
கடலூர் மாவட்டத்தில் பிறந்த ராஜ்குமார் கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்தவர் ஆவார்.
இவர் 1980ம் ஆண்டுகளில் வெல்வெட் ஷாம்பு நிறுவனத்தை துவங்கி சிறுசிறு பாக்கெட்களில் அடைத்து ஷாம்புவிற்பனை செய்ய துவங்கினார்.
வெல்வெட் ஷாம்பு, நிவாரன் 90, மெமரி பிளஸ் ஆகியவை அவரது சொந்த நிறுவனத்தின் தயாரிப்புகளாகும். ஷாம்பு மற்றும் இருமல் மருந்தை சாஷே பாக்கெட்களில் அடைத்து, சாமான்ய மக்களும் வாங்கும் விலையில் விற்பனை செய்தார்.
கெவின் கேர் நிறுவன தலைவர் சி.கே. ரங்கநாதன் இவரின் சகோதரர் ஆவார். சுஜாதா பயோ டெக் ஆய்வகத்தை சி.கே.ராஜ்குமார் நிறுவினர்.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.அவருக்கு மனைவி, 2 மகள்கள் மற்றம் ஒரு மகன் உள்ளனர்.