டிரம்ப் மீதான மற்றொர் படுகொலை முயற்சியை முறியடித்த அதிகாரிகள்

அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் மீதான படுகொலை முயற்சியை விரைவாக முறியடித்த ரகசியச் சேவைப் பிரிவு பாராட்டுப் பெற்றுள்ளது.

திரு டிரம்ப் புளோரிடா (Florida) மாநிலத்தில் கோல்ஃப் (Golf) மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது படுகொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 455 மீட்டர் தொலைவில் இருந்த புதர்களில் சந்தேக நபர் மறைந்திருந்தார்.

அங்கு ஒரு துப்பாக்கியைக் கண்ட ரகசியச் சேவைப் பிரிவு அதிகாரி சந்தேக நபரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார்.

4 முறை துப்பாக்கி சுடப்பட்டது. ராயன் வீஸ்லி ரவ்த் எனும் சந்தேக நபர் பதிலுக்குத் தாக்கினாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அவர் துப்பாக்கி, 2 பைகள், GoPro கேமரா போன்ற பொருள்களை விட்டுவிட்டு கருப்பு வாகனம் ஒன்றில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் சந்தேக நபரின் வாகன உரிம எண்ணைப் படமெடுத்தார்.

Interstate 95 நெஞ்சாலையில் காரில் தப்பிச் செல்வதை அங்கிருந்தவர் கண்டதோடு , தகவல் அறிந்த காவல்துறையினர் சந்தேக நபரைக் கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்டவர் 58 வயது ராயன் வீஸ்லி ரவ்த் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் ஏன் திரு டிரம்ப்பைப் படுகொலை செய்ய முயன்றார் என்பது தெரியவில்லை. விசாரணை தொடர்கிறது.

படுகொலை முயற்சியை முறியடிக்கத் தேவையான அனைத்தையும் ரகசியச் சேவைப் பிரிவு சரியாகச் செய்தது என்று காவல்துறையினர் பாராட்டியுள்ளர்.

ஜூலை மாதம் திரு டிரம்ப் மற்றொரு படுகொலை முயற்சிக்கு ஆளானபோது ரகசியச் சேவைப் பிரிவு குறைகூறப்பட்டது.

பிரிவின் தலைவர் கிம்பெர்லி சீட்டல் (Kimberly Cheatle) பதவி விலகினார்.

மேலும் 5 அதிகாரிகள் நிர்வாக அடிப்படையில் விடுப்பில் அனுப்பப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.