பதுளை பரப்புரைக் கூட்டத்தில் ரணிலை ஆதரித்து திரண்ட மக்கள்.
‘ரணிலால் இயலும்’ பரப்புரைக் கூட்டம் பதுளையில்(16) திங்கட்கிழமை பிற்பகல் நடைபெற்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர்களான சாமர சம்பத் தஸநாயக்க, வடிவேல் சுரேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், முன்னாள் அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ, தலதா அத்துகோரள உள்ளிட்டோர் உரையாற்றினார்கள்.