அதிக கட்சி அலுவலகங்கள் : ஒன்று அனுர, இரண்டு சஜித் மற்றும் மூன்று ரணில்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மூன்று பிரதான வேட்பாளர்களில், தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனுரகுமார திஸாநாயக்கவே அதிக எண்ணிக்கையிலான கட்சி அலுவலகங்களை நிறுவியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி வேட்பாளருக்காக நாடு முழுவதும் 4980 கட்சி அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு 1013 கட்சி அலுவலகங்களும், ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு 3872 கட்சி அலுவலகங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, மூன்று முக்கிய வேட்பாளர்களுக்காக நாடு முழுவதும் கிட்டத்தட்ட பத்தாயிரம் கட்சி அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான கட்சி அலுவலகங்கள் மேல் மாகாணத்தில் அமைந்துள்ளன.
அடுத்த அதிக எண்ணிக்கையிலான கட்சி அலுவலகங்கள் தென் மாகாணத்திலும் வடமேற்கு மாகாணத்திலும் அமைந்துள்ளன.