SJB துண்டுப் பிரசுரங்கள் வேண்டாம் என சொன்ன கடைக்காரருக்கு அறைந்த SJB அமைப்பாளர்.

SJBயின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் சசங்க சம்பத் சஞ்சீவ, SJB துண்டுப் பிரசுரத்தை ஏற்க மறுத்த நபரை தாக்குவது கடையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.

நாவலப்பிட்டி நகர மையத்தில் உள்ள மணிக்கூண்டு பழுதுபார்க்கும் கடையின் உரிமையாளரின் மகனே (15) காலை 11 மணியளவில் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

SJBயின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக, அக்கட்சியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் சசங்க சம்பத் சஞ்சீவ தனது ஆதரவாளர்கள் குழுவுடன் கடைக்கு வந்து துண்டுப் பிரசுரம் ஒன்றைக் கொடுக்க முயல்வதும் , தாக்குவதும் பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

சசங்க சம்பத் சஞ்சீவ இளைஞனை தாக்கியதையடுத்து, அமைப்பாளருடன் வந்த அக்கட்சியின் ஆதரவாளர்கள் தேர்தலில் “உங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று அந்த இளைஞனை மிரட்டியுள்ளனர்.

தாக்குதலின் பின்னர், இளைஞன் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தனது எதிர்கால பாதுகாப்புக்காக அந்த வைத்தியசாலையில் பொலிஸில் முறைப்பாடு செய்து (16) வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான இளைஞனின் கடை 16ம் திகதி அன்று மூடப்பட்டு காணப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.