ஜனாதிபதித் தேர்தல் கால பாதுகாப்புக்கு முப்படைகள் தயார் நிலையில் ….

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது அவசரநிலை ஏற்பட்டால் உடனடியாகச் செயற்பட முப்படைகளும் தயாராக உள்ளன.
பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள விசேட கோரிக்கைக்கு அமைய முப்படையினரும் களமிறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி முப்படையினரும் எதிர்வரும் 20ஆம் திகதி காலை 08.00 மணி முதல் குறித்த பொலிஸ் நிலையங்களில் இராணுவ அதிகாரிகள் கடமைகளில் ஈடுபட உள்ளனர்.