ரணில் சஜித்… நீங்கள் இந்த நாட்டுக்கு சரியானதைச் செய்திருக்க வேண்டும்… இந்த நாட்டைக் கட்டியெழுப்ப நாங்கள் தயாராக இருக்கிறோம்… என்கிறார் அனுரகுமார திஸாநாயக்க!

“ரணில் சஜித் இந்த நாட்டிற்கு என்ன செய்தவை போதும் என்கிறோம். தயவு செய்து ஒதுங்கவும். இந்த நாட்டை கட்டியெழுப்ப நாங்கள் தயாராக உள்ளோம். என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் திரு அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அக்குரஸ்ஸ பிரதேசத்தில் நேற்று (16) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இந்த மூன்று நான்கு நாட்களுக்குள் செய்யக்கூடிய , சதிகள் அனைத்தையும் செய்யத் தொடங்கிவிட்டனர். பொதுவாக, நமது நாட்டின் பொது மக்கள் கடந்த காலத்தில் இனவாதத்தையும் மதவாதத்தையும் நிராகரித்தனர். சஜித் பிரேமதாசவுக்கு உதவி செய்யும் சில பிக்குகள், நாங்கள் வந்ததும் தானம் கொடுப்பது நின்றுவிடும் என்கிறார்கள். சஜித் பிரேமதாசவின் மேடைக்கு வந்த சில பிக்குகள் நாங்கள் வந்ததும் தேசியக் கொடியை அழிப்போம் என பிரசாரம் செய்தனர். அதற்கு அடுத்ததாக அரசியலமைப்பின் 09வது சரத்தை நீக்குவோம் என்கிறார்கள். தீவிர இனவாத அமைப்புகளை தங்கள் மேடையில் வைத்துக்கொண்டு இவற்றைச் சொல்கிறார்கள். சஜித்தின் மேடையில் அவர்கள் கூறும் போது ரிஷாத் பதியுதீனும் இருக்கிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களும் உள்ளனர். இன்று இவர்களது தேர்தல் பிரசாரம் அவமதிப்புக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படும் அளவிற்கு கையாலாகாத நிலை ஏற்பட்டுள்ளது. இது இயலாமையின் வெளிப்பாடு. கவலையின் வெளிப்பாடு.

மறுபுறம் ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார் நாம் வந்தால் நாடு ஸ்திரமற்றதாகிவிடும். டாலர் உயர்ந்து விடும். எரிபொருள் இல்லாமல் போய்விடும் என்கிறார்கள். இவற்றை அழித்தவர்கள் இவர்களே. 2015 முதல் 2019 வரை சர்வதேச இறையாண்மைப் பத்திரங்களில் பதினைந்தரை பில்லியன் டொலர்களை கடனாகப் பெற்றவர் ரணில் விக்கிரமசிங்க. மஹிந்த ராஜபக்ஷ மூன்று பில்லியன் டொலர்களை எடுத்துள்ளார். திருப்பிச் செலுத்த முடியாத அனைத்து சர்வதேச இறையாண்மைப் பத்திரங்களையும் ரணில் விக்கிரமசிங்க வாங்கினார். இப்போது ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார் , நாம் வந்தால் பொருளாதாரம் வீழ்ச்சியடையுமாம். நீங்கள் அழித்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வருகின்றது என ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறுகின்றோம். ரணில் சஜித் இந்த நாட்டுக்கு என்ன செய்தனரோ அதுவே போதும் என்கிறோம். தயவு செய்து ஒதுங்கவும். இந்த நாட்டை பொறுப்பேற்று, இந்த நாட்டை ஒவ்வொன்றாகக் கட்டியெழுப்ப நாங்கள் தயாராக உள்ளோம் என அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.