அசையும் கயிற்று பாலத்தை வலுப்படுத்த உங்களால் மட்டுமே இயலும் – ஜனாதிபதி

செப்டெம்பர் 21 ஆம் திகதி எரிவாயு சிலிண்டருக்காக வாக்களிக்குமாறு மக்களிடம் கோருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடு கஷ்டப்பட்டு பெற்ற வெற்றியை பாதுகாத்து முன்னேற வேண்டுமானால் இதுதான் நடக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அரசாங்கம் ஏற்கனவே அமுல்படுத்திய வேலைத்திட்டத்திற்கே சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு என தெரிவித்த ஜனாதிபதி, மக்கள் முன் வந்து பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் சஜித்திடமோ அல்லது அநுரவிடமோ நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டம் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.

வெல்லவாயையில் நேற்று (16) பிற்பகல் நடைபெற்ற “ரணிலால் இயலும்” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“ஹம்பாந்தோட்டையின் கைத்தொழில்கள் அபிவிருத்தியடையும் போது இந்த வெல்லவாய பிரதேசத்திற்கும் முதலீட்டு வலயம் கிடைக்கும். அத்துடன், மொனராகலையில் விரிவான அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றோம். இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆணையையே நாம் கேட்கின்றோம்.

இந்த நாட்டின் இளைஞர்களுக்கு 04 வருடங்களாக வேலை கிடைக்கவில்லை. அடுத்த ஆண்டு அரசு மற்றும் தனியார் துறையில் ஒரு லட்சம் சுயவேலைவாய்ப்பை உருவாக்குவோம்.

மேலும், 50,000 பேருக்கு அவர்கள் விருப்பமான ஒரு நிறுவனத்தில் பயிற்சி பெற பணம் தருவோம் என்று நம்புகிறோம்.

இதற்கு கயிற்று பால பயணத்தை முடிக்க வேண்டும். நாம் இன்னும் சிறிது தூரம் செல்ல வேண்டும். இப்போது கயிற்று பாலம் கொஞ்சம் ஆடுகுகிறது. செப்டம்பர் 21ஆம் தேதி மக்கள் தங்கள் கடமையைச் செய்தால் இந்த கயிற்று பால பயணத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும். இன்று கயிற்று பாலத்தை கடக்கும் குழந்தையின் உரிமையை எடுக்க இரண்டு பேர் உள்ளனர். இருவருக்கும் நன்கு பேச தெரிகிறது, ஆனால் வேலை செய்ய முடியாது.

எனவே, நாட்டின் எதிர்காலத்தை அவர்களிடம் ஒப்படைக்க முடியாது. நாம் முன்னேற வேண்டுமானால், IMF ஆதரவுடன் முன்னேற வேண்டும். அரசு இதுவரை செயல்படுத்திய திட்டத்திற்கு ஆதரவு எனவும் கூற வேண்டும்.

இது குறித்து நாம் கூறும்போது, ​​முன்னாள் விவசாய அமைச்சர் அனுரகுமார என்னிடம் விவாதம் நடத்த அழைத்தார். நான் அதற்கு தயாராக இருக்கிறேன் என்றேன். ஆனால் நான் இன்னும் காத்திருக்கிறேன். ஆனால் இன்னும் அழைப்பு வரவில்லை. இன்றும் நான் அதற்கு தயாராக இருக்கிறேன். அவர்களால் ஏன் வாதிட வர முடியாதுள்ளது? அதற்குக் காரணம் அவர்களிடம் எந்தத் திட்டமும் இல்லை.

சஜித் எதையும் இலவசமாக கொடுக்க தயார். நாளை தலைவலியையும் இலவசமாக தருவதாகச் செல்வார். ஆனால் நாம் கடினமாகப் பெற்ற வெற்றியைப் பாதுகாத்து முன்னேற வேண்டும். அதற்காக செப்டம்பர் 21ஆம் தேதி காஸ் சிலிண்டருக்கு அனைவரையும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார் ரணில்.

Leave A Reply

Your email address will not be published.