கொரோனோவின் புதுப்புது சாதனைகள்,வேதனைகள்

கொரோனோ வைரஸ் தன் ஆக்டோபஸ் கரங்களால் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது.
சளி,இருமல்,காய்ச்சல்,நுரையீரல் தொற்று என்பன போன்றவையே கோவிட் 19 வைரஸின் அறிகுறிகள் என்று பெரும்பாலும் அறியப்பட்டது.
இப்பொழுது ஆராய்ச்சியாளர்கள் இவ்வறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே நரம்பியல் தொடர்பான அறிகுறிகள் தோன்றுகின்றன என்று கண்டறிந்திருக்கின்றார்கள்.இது குறித்த ஆய்வு, ‘ஆன்னல்ஸ் ஆப் நியூராலஜி’ இதழில் வெளியாகியுள்ளது.
அவ்வாராய்ச்சியில் தலைவலி மற்றும் தலைசுற்றல் ஆகியவை இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மிக அரிதாக, மூளைத் தாக்குதல் எனப்படும் பக்கவாதம், சுறுசுறுப்பு குறையதல் போன்ற நரம்பியல் நோய்கள் கொரோனாவின் அறிகுறிகளாக இருக்கின்றன். இன்னும் என்னென்ன விதமாக அவதாரம் எடுக்கப் போகிறதோ !!!!