தம்பியைச் சுட்டுக்கொலை செய்த அண்ணன் – சம்மாந்துறையில் கொடூரம்.

வீடொன்றில் இளம் குடும்பஸ்தர் மரணமடைந்த சம்பவம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான பக்கீர் முகையதீன் றோஜான் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை இரவு 10.45 மணியளவில் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
ரிப்பிட்டர் ரக துப்பாக்கியே படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்தள்ளது.
சம்பவம் தொடர்பில் தம்பி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் எனக் கூறப்படும் சந்தேகநபரான சகோதரரைச் சம்மாந்துறைப் பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக்க வைக்கப்பட்டுள்ளது.