தொழிற்பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு.

திருக்கோவில் விநாயகபுரம் தெழில் பயிற்சி நிலையத்தில் 2017/2018 ஆண்டுகான NVQ பயிற்சி நெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவர்களுக்கு திருக்கோவில் பிரதேச செயலாளர் T.கஜேந்திரன் தலைமையில் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.இன்நிகழ்வானது திருக்கோவில் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் T.கஜேந்திரன் தொழில் பயிற்சி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பிரதிப்பணிப்பாளர் MB.நலீம் அவர்களும் நிகழ்ச்சி திட்ட உத்தியோர்த்தர் MM.மெளசூன் அவர்களும் திருக்கோவில்உதவிப் பிரதேச செயலாளர் K.சதிசேகரன் திருக்கோவில் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் செல்வி M.அனோஜா,திறன் அபிவிருத்திஉத்தியோர்த்தர் K.ஜீவகுமார் சமுர்திதலைமை முகாமையாளர் T.பரமானந்தம் விநாயகபுரம் தொழில் பயிற்சி அதிகார சபையின் பொறுப்பதிகாரி திலகராஜ் மற்றும் திருக்கோவில் பிரதேச சமுர்த்தி சமூக பாதுகாப்பு உத்தியோர்த்தர் SP.சீலன் ஆகியோர் இன்நிகழ்வில் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.