அமைதியான நேரம் அமுலுக்கு வந்தது … மீறுவோர் தண்டிக்கப்படுவர்!
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தேர்தல் பிரசாரங்கள் நேற்று (18) நள்ளிரவு 12:00 மணியுடன் நிறைவடைந்ததையடுத்து, தேர்தல் நேரம் வரை அமைதியான காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில், அனைத்துவிதமான பிரசார நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளதுடன், தேர்தல் விதிமுறைகளை மீறும் எந்தவொரு தரப்பினரையும் கைது செய்து சட்டத்தை அமுல்படுத்தும் திறன் பொலிஸாருக்கு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரங்களைக் கண்காணிக்க இரண்டு தனித்தனி சிறப்புக் குழுக்கள் தேர்தல் ஆணையத்தால் நிறுத்தப்பட்டுள்ளன.
மௌன காலம் என பெயரிடப்பட்ட இரண்டு நாட்களின் பின்னர், 9வது நிறைவேற்று ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலின் வாக்களிப்பு நாளை மறுநாள் (21) நடைபெறவுள்ளது.
நாளை மறுநாள் காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.