லெபனானில் மற்றொரு தொடர் வெடிப்பு, முன்னர் பேஜர் கருவி , இந்த முறை வாக்கி-டாக்கி (வீடியோ)
லெபனானில் மீண்டும் ஒரு முறை வாக்கி-டாக்கிகளை குறிவைத்து தொடர் வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.
இதன் காரணமாக, 20 பேர் இறந்தனர் மற்றும் 450 பேர் காயமடைந்தனர், மேலும் ஏராளமான வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானது.
லெபனான் தீவிரவாதக் குழுவான ஹிஸ்புல்லாவை குறிவைத்து லெபனான் முழுவதும் பேஜர் கருவி வெடித்ததில் 8 வயது சிறுமி உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 2,800 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் இஸ்ரேலால் நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது மற்றும் அவர்கள் லெபனானின் முழு தகவல் தொடர்பு வலையமைப்பிலும் ஊடுருவியதற்கான சாத்தியமான அறிகள் தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினமும் (17) லெபனானில் 9 ஹிஸ்புல்லா ஆயுததாரிகள் கொல்லப்பட்டதோடு , 3000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் காயமடைந்தனர்.
லெபனானில் செய்தித் தொடர்புகளில் பயன்படுத்தப்படும் ஆயிரக்கணக்கான ‘எலக்ட்ரானிக் பேஜர்கள்’ வெடித்துச் சிதறின. பலியானவர்களில் பெய்ரூட்டில் உள்ள ஈரானிய நிரந்தரப் பிரதிநிதியும் ஒருவர்.
இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனம் அதன் பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவுகளுக்குள் ஊடுருவி, வெளிநாட்டிலிருந்து ஹெஸ்புல்லாவால் இறக்குமதி செய்யப்பட்ட 5,000 பேஜர்களில் வெடிபொருட்களை வைத்து வெடிக்க வைத்துள்ளனர்.
வெடிபொருட்களைக் கொண்ட ஒரு சிறிய சுற்று பேஜர்களுக்குள் நுட்பமாக செலுத்தப்பட்டுள்ளது, மேலும் அவை எந்த வெளிப்புற சாதனத்தாலும் கண்காணிக்க முடியாமல் உள்ளது என ஹெஸ்பொல்லா அமைப்பு கூறுகிறது. சாதனங்கள் அதன் ஆயுதப் படைகளின் உறுப்பினர்களின் கைகளில் கிடைத்ததும், மொசாட் அனுப்பிய ரகசிய குறியீட்டின் மூலம் அவை வெடித்தன. ஒரு பேஜரில் சுமார் 3 கிராம் வெடிபொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது
பெயர் வெளியிட மறுத்த அமைப்பின் உறுப்பினர் ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி சேவையிடம், காசா போர் தொடங்கிய பின்னர் ஹெஸ்பொல்லாவின் பாதுகாப்பு உளவுத்துறை பெரும் தோல்வியை சந்தித்தது இதுவே முதல் முறை எனக் கூறினார். ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, ஆயிரக்கணக்கான ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் முகம், கைகள் மற்றும் பொதுவாக பேஜர்கள் அணியும் இடுப்பு பகுதியில் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.