ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை.
நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தேர்தல்கள் திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கையின் பிரகாரமே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை மீளத் திறக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.