பரீட்சை வினாத்தாள் சர்ச்சை குறித்து விசாரணை ஆரம்பம்.

நாட்டில் கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாப்பத்திரம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை சம்பந்தமாக விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
பரீட்சைகள் திணைக்களமும், குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன என்று கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
விசாரணைகள் முடிவடைந்த பின்னரே இந்தப் பிரச்சினை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.