மன்னாரில் வாக்களிப்பு நிலையங்கள் தயார்ப்படுத்தும் பணிகள் முன்னெடுப்பு.
மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களைத் தயார்ப்படுத்தும் பணிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று (19.09) வியாழன் ,பாடசாலை நிறைவின் பின் மன்னார் மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களாகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளனைத்தும் கிராம சேவையாளர்களின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்டத்தில் இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கு 90607வாக்காளர்ககள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள நிலையில், 98 வாக்களிப்பு நிலையங்கள் வாக்களிப்புக்காகத் தயார்ப்படுத்தப்பட்டு வருகின்றது. அத்துடன் 07 வாக்கு என்னும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மன்னார் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 38 வாக்களிப்பு நிலையங்களும் காணப்படுகின்றன.
இந்நிலையில், மன்னார் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வாக்களிப்பு நிலையங்களின் நிலை குறித்து ஆராயும் முகமாக மன்னார் பிரதேச செயலாளர் மனோகரன்.பிரதீப் தலைமையிலான குழுவினர் நேரடியாக சென்று பார்வையிட்டு வருகின்றனர்.