காவல்துறையினரிடமிருந்து சமூக ஊடக வலையமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை .

தேர்தல் பிரசாரத்திற்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தின் பின்னர் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரச்சாரம் செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
அதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சமூக ஊடக வலையமைப்புகள் ஊடாக தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான விடயங்களை பரப்புபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.