9 அரசு அதிகாரிகளின் தேர்தல் பணிகள் இடைநிறுத்தம்.
வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கிய ஹம்பாந்தோட்டை அரச அதிகாரிகள் 19 பேரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட தேர்தல் அதிகாரி எச். பி. சுமணசிறி கூறுகிறார்.
09 அரச அதிகாரிகளின் தேர்தல் கடமைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (18) அந்த அரச அதிகாரிகள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பாக 17 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.