மீனவர்களுக்கான மீன் பிடிவலைகள் மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கல்.
கடந்த காலங்களில் காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை அனர்தத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த மன்னார் மாவட்ட மீனவர்களுக்கான மீன் பிடிவலைகள் மற்றும் வாழ்வாதார உதவிகள் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணக்கள கேட்போர் கூடத்தில் வைத்து இன்று வியாழக்கிழமை மாலை வழங்கிவைக்கப்பட்டது.
இவ் ஆண்டின் ஆரம்ப பகுதியில் ஏற்பட்ட சூறாவலி காரணமாகவும் கடும் மழை காரணமாகவும் வாழ்வாதாரத்தை இழந்த மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பேசாலை,நடுக்குடா,பள்ளிமுனை,தாழ்வுபாடு பகுதிகளை சேர்ந்த 70 மீனவர்களுக்கான மீன்பிடி வலைகள் மேற்படி வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை உதவிப்பனிப்பாளர் I.M.G சரத் சந்திரநாயக்க மன்னார் மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் S.பவானிதி மன்னார் நகர் கடற்றொழில் பரிசோதகர் A.M.M பதீன் மற்றும் உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டு பாதிக்கப்பட மீனவர்களுக்கான மீன்பிடி வலைகளை வழங்கி வைத்தனர்.