போலி ஓட்டு போட்டால் இரண்டு லட்சம் அபராதம்

மோசடியாக வாக்களிக்கும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் 02 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குற்றச்சாட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நபர்களுக்கு ஒரு வருடத்திற்கு மிகையாகாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
2023 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் தொடர்புடைய சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன.
முன்னதாக, முறைகேடாக வாக்களிக்கும் நபருக்கு விதிக்கப்பட்ட அபராதம் 500 ரூபாவாகும்.