பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்னால் வரிசைகள்

பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்னால் வரிசைகள் உருவாகியுள்ளதாக செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
நாளைய தினம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எதிர்வரும் இரண்டு நாட்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சேவைகளை நடத்துவதற்கு போதிய பணியாளர்கள் இல்லாமல் போகலாம் எனும் சந்தேகத்தில் வாகனங்களில் எரிபொருளை நிரப்புவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.