மன்னார் மாவட்டத்தில் காலை தொடக்கம் மாலை 3 மணி வரை 59 ஆயிரத்து 730 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்-மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன்.

மன்னார் மாவட்டத்தில் மிகவும் அமைதியான முறையில் காலை 7 மணி முதல் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில் மாலை 3 மணி வரையிலான் முடிவில் 59 ஆயிரத்து 730 வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
இது மொத்த வாக்குகளில் 65.92 வீதமாக காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.9