வரலாற்றில் வன்முறையற்ற மிகவும் அமைதியான தேர்தல் இது… பதிவான வாக்குகள் குறைவு
இன்றைய (21) ஜனாதிபதித் தேர்தலின் பிராந்திய மட்ட வாக்களிப்பு முடிவுகளை இரவு 12 மணிக்கு முன் வெளியிட முடியும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு இன்று காலை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7:00 மணிக்கு தொடங்கியது. 4:00 மணிக்கு முடிந்தது
இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னர் நிறைவடைந்த ஜனாதிபதித் தேர்தல், இலங்கையில் இதுவரை நடைபெற்ற மிக அமைதியான தேர்தலாக வரலாற்றில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, வாக்களிக்கும் காலப்பகுதியில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என குறிப்பிட்டார்.
எனினும் கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் பதிவான வாக்குகள் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.