75% முதல் 80% வரை வாக்குப்பதிவு – மாவட்ட ரீதியாக பதிவான வாக்குகளின் வீதங்கள் – வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்
இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது.
இந்த ஆண்டு 38 வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இணைந்துள்ளனர், மேலும் இந்த ஆண்டுக்கு கிட்டத்தட்ட 9 லட்சம் புதிய வாக்காளர்கள் உட்பட மொத்தம் 17 மில்லியன் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
வாக்கெடுப்பு முடிவடையும் போது 75% முதல் 80% வரையான பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.
429 வாக்கு எண்ணும் மையங்களில் மாலை 5.00 மணிக்கு தபால் வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பமானது என்றும், நள்ளிரவில் முதல் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, செப்டம்பர் 21, அதாவது இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று (21) மாலை 4 மணியளவில் மாவட்ட மட்டத்தில் பதிவான வாக்குகளின் வீதங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.
களுத்துறை – 75%
காலி – 74%
வவுனியா – 72%
மன்னார் – 72%
பதுளை – 73%
அம்பாந்தோட்டை – 78%
கேகாலை – 75%
அனுராதபுரம் – 75%
மட்டக்களப்பு – 69%
நுவரெலியா – 80%
மொனராகலை – 77%
பொலன்னறுவை – 78%
இரத்தினபுரி – 75%
கம்பஹா – 80%
கொழும்பு – 75% – 80%
அம்பாறை – 70%
கிளிநொச்சி – 68%
புத்தளம் – 75%