கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் இப்ராஹிம் அகில் 300 படுகொலைகளில் முக்கிய பங்கு வகித்தவர்
1983 ஆம் ஆண்டு லெபனானின் பெய்ரூட்டில் 300க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற இரண்டு டிரக் குண்டுவெடிப்புகளில் முக்கிய பங்கு வகித்ததாக இஸ்ரேலிய வான்வழி ஏவுகணைத் தாக்குதலில் நேற்று (20) உயிரிழந்த ஹமாஸ் தலைவர் இப்ராஹிம் அகில் குறித்து அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க தூதரகத்திலும், அந்நாட்டில் உள்ள கடற்படைத் தளத்திலும் இரட்டை வெடிகுண்டுகள் நடத்தப்பட்டன.
இரட்டை வெடிகுண்டு தாக்குதலின் பின் , அவர் செய்த குற்றம் தொடர்பாக , அமெரிக்கா அவரது தலைக்கு 7 மில்லியன் டாலர் பரிசு அறிவித்தது.
லெபனானும் தனது மூத்த ராணுவத் தலைவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளது. அவர் தஹ்சின் (Tahsin) மற்றும் அப்தெல்காதர் (Abdelqader)என்ற மாற்றுப்பெயர்களில் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
1983 இல், லெபனானில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது டிரக் குண்டுத் தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டனர், சில மாதங்களுக்குப் பிறகு, லெபனானில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளத்தின் மீது இதேபோன்ற மற்றொரு தாக்குதலில் 241 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
அகில் 1960 இல் பிறந்தார்.